9 வயதே நிரம்பியுள்ள உலகின் இளைய பட்டதாரி!!!

  அபிநயா   | Last Modified : 15 Nov, 2019 08:10 pm
9-year-old-boy-set-to-become-world-s-youngest-graduate

ஆம்ஸ்டர்டாம் : லாரன்ட் சைமன்ஸ் (9), வரும் டிசம்பர் மாதம் தனது இளங்கலை பட்டத்தை முடிப்பதுடன், உலகின் இளைய பட்டதாரி ஆக சாதனை புரியவுள்ளார்.

ஐரோப்பாவின் பெல்ஜியம் நகரில் பிறந்தவர் லாரன்ட் சைமன்ஸ். இவரது 4வது வயதில் பள்ளியில் சேர்ந்த இவர், 5ஆண்டு கால படிப்பினை வரும் 12 மாதங்களுக்குள் முடித்து விட்டார். அதன்பின்னர், தனது எட்டாவது வயதில் மேல்நிலை படிப்பையும் முடித்ததோடு கல்லூரியிலும் சேர்ந்து விட்டார். ஐன்ட்ஹோவன் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் மின் பொறியியல் துறையில் சேர்ந்த இவர், கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு 9 மாதங்கள் கழிந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் இளங்கலை பட்டம் பெறவுள்ளார்.

இதை தொடர்ந்து, பி.ஹெச்.டி படிக்க விரும்பும் இவர் அதே நேரத்தில் மருத்துவ படிப்பிற்காகவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 9 வயதில் இளங்கலை பட்டம் பெற போகும் சைமன்ஸின் ஆசிரியர்கள் கூறுகையில், லாரன்ட் ஐ சோதிப்பதற்காக பலவகையான தேர்வுகள் அளித்துள்ளதாகவும், இந்த சிறுவன் அறிவு ஆசிரியர்களே வியக்கத்தக்க வகையில் அமைய பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர். 

வரும் டிசம்பர் மாதம் பெற போகும் இளங்கலை பட்டத்தை தொடர்ந்து உலகின் இளைய பட்டதாரியாக கின்னலில் இடம்பெறவிருக்கிறார் லீரன்ட் சைமன்ஸ். இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு தனது 10வயதில் இளங்கலை பட்டம் முடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்த கியர்னியின் சாதனையை சுமார் 25ஆண்டுகளுக்கு பிறகு முறியடிக்க போகிறார் லாரன்ட் சைமன்ஸ். 

இது குறித்து இவரது பெற்றோரான அலெக்சாண்டர் மற்றும் லிடியா கூறுகையில், இளங்கலை பட்டம் பெறுமளவு அறிவு கொண்டிருந்தாலும், எங்களை பொறுத்த வரை அவன் இன்னும் 9 வயது சிறுவன் தான். இப்போதும், அவனது நாயுடன் விளையாட விரும்பும் அவன் படிப்புடன் சேர்த்து தனது வயதில் அனுபவிக்க வேண்டிய சிறு சிறு மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டியதை நாங்கள் முக்கியமாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close