ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 25 Dec, 2017 12:14 pm


இன்று ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகள் சமீபகாலமாக இடைவிடாது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காபூல் அப்துல்லா சதுக்கம் அருகே தேசிய பாதுகாப்பு இயக்குனரக அலுவலகம்  அலுவலகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close