கூட்டுப்படை தாக்குதல்களில் ஏமன் மக்கள் 32 பேர் பலி!

  SRK   | Last Modified : 26 Dec, 2017 04:14 am


சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டை கைப்பற்றியுள்ள ஹூத்தி படைகள் மீது நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் பொதுமக்கள் பலர் பலியாவது அதிகரித்து வருகிறது. 

ஏற்கனவே, பல திருமண நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் குண்டு வீசி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த தாக்குதல்களில், பொதுமக்கள் 32 பேர் இறந்துள்ளதாக ஏமனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸெர் என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் விமானப்படை குண்டுகள் வீசியதில் அந்த வீட்டில் இருந்த 9 பேர் மற்றும் வெளியே சென்று கொண்டிருந்த 2 பேர் இறந்தனர். அல் ஹுதயா என்ற ஊரில் பேருந்துகள் மீது வீசப்பட்ட குண்டுகளில், 9 பேர் இறந்ததாக ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

மேலும் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 55க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close