ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சவூதி இளவரசர்கள் விடுதலை

  Anish Anto   | Last Modified : 26 Dec, 2017 07:43 am


அரசு பணத்தை கையாடல் செய்தது, அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்ட சவூதி அரச குடும்பத்தின் இளவரசர்கள் உட்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் முடி இளவரசராக பொறுப்பேற்ற பின்னர் முகமது பின் சல்மான் பல்வேறு அதிரடி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரின் நடவடிக்கையால் சவூதி அரேபியா மட்டுமன்று உலக நாடுகளே அவரை கூர்ந்து கவனித்து வருகின்றன. பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக அவர் கொண்டு வந்த திட்டங்கள் உலக அளவில் பாராட்டுகளை பெற்றது.

சமீபத்தில் சவூதி அரசில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார். அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வழியாக, மக்கள் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட அரசு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் பல இளவரசர்கள் அதிகார துப்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சவூதி இளவரசர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை அளிக்கப்படும் என சவூதி மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஊழல் செய்த பணத்தை திருப்பி அளித்தால் விடுதலை கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என முடி இளவரசர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் பெரும்பான்மையானோர் அதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தற்போது முதல் கட்டமாக இளவரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதம் இருப்பவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் எனவும் கூறப்படுகிறது. முகமது பின் சல்மானால் அமைக்கப்பட்ட குழு, 2009 ஜேடா வெள்ளம் மற்றும் மத்திய கிழக்கு சுவாச தொற்று நோய் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close