ஏமன்: சவூதி கூட்டுப்படைகள் தாக்குதலில் 40 பேர் பலி

  Anish Anto   | Last Modified : 27 Dec, 2017 08:03 am

ஏமன் நாட்டில் சவூதி கூட்டு வான்படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியால் அந்நாடு எப்போதும் பதற்ற நிலையுடன் காணப்படுகிறது. அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களை அடக்க ஏமன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அண்டை நாடுகளின் உதவியையும் அந்நாட்டு அரசு நாடி உள்ளது. ஏமன் ராணுவத்துடன் இணைந்து சவூதி ராணுவம் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளை காட்டிலும் அப்பாவி பொதுமக்களே அதிக அளவில் பலியாகின்றனர்.

நேற்று அல்-தைசியா மாவட்டத்தில் சவூதி தலைமையிலான கூட்டு வான்படைகள் தாக்குதல் நடத்தின. ஹெளதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள ஸுஹ்ராஹ் சந்தை பகுதியை குறி வைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் பலியாகி உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெளதி அமைப்பின் தொலைக்காட்சி ஒன்று, சந்தை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் உடல் சிதறி பலியாகி இருப்பதாகவும், அவர்களின் அடையாளங்கள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 ஏமன் நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு படைகளுக்கும், ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போரானது நடைபெற்று வருகிறது. கடந்த 2015 முதல் சவூதி ராணுவம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் ஏமன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 10,000-க்கும் அதிகமான ஏமன் மக்கள் இந்த போரால் கொல்லப்பட்டுள்ளனர், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிளாக்கப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close