ரஷ்யா பதிலடி... 30க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் பலி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 04 Feb, 2018 11:58 am

நேற்று ரஷ்யா போர் விமானத்தை சிரியா கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இன்று ரஷ்யா மிகவும் ஆக்ரோஷத்துடன் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷ்யாவின் எஸ்யு 25 ரகப் போர் விமானத்தை சிரியா கிளர்ச்சியாளர்கள் நேற்று விமானம் தகர்ப்பு ஏவுகணை மூலம் வீழ்த்தினர். இதில், ரஷ்ய விமானியும் உயிரிழந்தார். இதற்குப் பழிவாங்கும் வகையில் இன்று சிரியாவின் இத்லிப் மாகாணத்தின் வட மேற்குப் பகுதியில் ரஷ்யா பயங்கரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில், கிளர்ச்சியாளர்களின் ஜபாத் அல் நுஸ்ரா அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து விமானம் மூலம் தாக்குதல் நடந்து வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close