நாளை இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்!

  முத்துமாரி   | Last Modified : 14 Feb, 2018 05:35 pm


அரசுமுறைப் பயணமாக ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி நாளை இந்தியா வரவிருக்கிறார். நாளை முதல் பிப்ரவரி17ம் தேதி வரை இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஈரான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானியை அவர் சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கும் உள்ள வர்த்தகம், ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து ஈரான் பிரதமரை இந்தியா வருமாறும் மோடி அழைத்தார். 

மோடியின் அழைப்பை ஏற்று ஈரான் அதிபர் நாளை இந்தியா வரவிருக்கிறார். வருகிற 17ம் தேதி பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close