ஈரான் விமான விபத்தில் 66 பேர் பலி!

  SRK   | Last Modified : 18 Feb, 2018 04:28 pm


ஈரான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள், விமான பணியாட்கள் உட்பட 66 பேர் உயிரிழந்துள்ளனர். 

சிரிய ரக உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று, தலைநகர் டெஹ்ரானில் இருந்து சென்றுகொண்டிருந்த போது, அந்நாட்டின் ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், தேடுதல் பணிகளில், ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள டேனா மலையில் விமானம் மோதியதாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். 

விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 60 பயணிகளும், பைலட் உள்ளிட்ட 6 விமான பணியாளர்களும் இருந்ததாக தெரிவித்தார். 

நாட்டின் அவசர சேவைகள் குழு அங்கு ஹெலிகாப்டர்களை அனுப்பினாலும், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்ட இடத்தில் இறங்க முடியவில்லை. தரை வழியாக அங்கு செல்ல முடியாததால், மீட்பு படையினர் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close