சவுதி அரேபியா பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி

  Sujatha   | Last Modified : 27 Feb, 2018 05:19 am


சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சவுதி அரேபியாவை பொறுத்தவரை பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் மாற்றி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருபவர்  சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான். சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதே அவரின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.

இதன்படி, பெண்களும் அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்ற அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டள்ளது. ரியாத், மக்கா, அல்-குசைம், அல் மதினா மாகாண பெண்கள் ராணுவத்தில் வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close