துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு 7.5 ஆண்டு சிறைவாசம்

  PADMA PRIYA   | Last Modified : 09 Mar, 2018 02:23 pm

துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

துருக்கியால் கடந்த 2016-ம் ஆண்டில், அதிபர் எர்டோகனுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. ஆனால், இந்த புரட்சியை எர்டோகன் சமாளித்தார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக  குற்றம்சாட்டது. இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. 

பத்திரிகையாளர்கள் 23 பேர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் 2 பேர் வேறு சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தண்டனைக்குள்ளான அனைத்து பத்திரிகையாளர்களும் அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென் குழுவுக்கு  நெருக்கமான ஊடகங்களுக்கு வேலை செய்தவர்கள் ஆவர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close