"நாங்களும் அணுஆயுதங்களை தயாரிப்போம்" - ஈரானுக்கு சவால்விட்ட சவுதி இளவரசர்

  PADMA PRIYA   | Last Modified : 17 Mar, 2018 11:13 am

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்தால் நாங்களும் அதை பின்பற்றுவோம் என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வரும் திங்கள்கிழமை அமெரிக்கா செல்ல உள்ளார். முன்னதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி ஒளிபரப்பப்பட்டுள்ளது. 

அதில் அவர், "சவுதி அரேபியா அணு ஆயுதங்களைத் தயாரிக்க விரும்பவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் நாங்களும் அணு ஆயுதம் தயாரிப்போம். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது அதிகார வரம்பை விரிவுபடுத்த விரும்பியது போல ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனியும் விரும்புகிறார். இதற்கான தனது திட்டத்தை மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படுத்த விரும்புகிறார். ஹிட்லரின் கொள்கையால் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதை, அந்த ஆபத்து நிகழும் வரை உலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உணரவில்லை. அதேபோன்ற சம்பவங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை"  என்று கூறியுள்ளார். 


அணு ஆயுத திட்டத்தை கைவிடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வரும் வேளையில் சவுதி இளவரசர் இவ்வாறு கூறியுள்ளார். சவுதி இளவரசரின் கருத்துக்கு ஈரான் உடனடியாக பதில் அளித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பஹ்ரம் காசெமி கூறும்போது, "இளவரசரின் வார்த்தைகளை மதிக்கத் தேவையில்லை. அவரது மனதில் கற்பனை நிரம்பி வழிகிறது. கசப்புணர்வும் பொய்களும் மட்டுமே அவரது வார்த்தைகளில் உள்ளது" என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.