ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 21 Mar, 2018 06:18 pm


ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இன்று தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 29 பேர் வரை கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை இன்று வெடிக்கச் செய்தனர்.  இந்த சம்பவத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது  29 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று ஆப்கான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close