அல் கைதா தீவிரவாத தாக்குதலில் 11 ஏமன் வீரர்கள் பலி

  SRK   | Last Modified : 29 Mar, 2018 08:35 am


ஏமன் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த கான்வாயை, அல் கைதா தீவிரவாதிகள் தாக்கியதில், 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

அந்நாட்டின் ஹத்ரமுட் பகுதியில், ஏமன் ராணுவ கான்வாய் சென்றுகொண்டிருந்தது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென 3 வாகனங்கள் கொண்ட அந்த கான்வாயை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட வீரர்கள் என ராணுவத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க, ஐக்கிய அரபு நாடுகள் ஆதரவுபெற்ற ஏமன்  படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close