ஏமனில் பதற்றம்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தாக்குதல்

  Padmapriya   | Last Modified : 05 Apr, 2018 08:42 pm

ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் சவுதி கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை தடுத்து நிறுத்தி எதிர் தாக்குதல் நடத்தியனர்.

ஹவுதி போராளிகளின்  ஏவுகணை  சவுதியின் பிரபல எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கை குறிவைத்து ஏவப்பட்டது. எதிர் தாக்குதலில் ஏவுகணையின் உதிரி பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 9.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் உறுதி செய்யப்படவில்லை.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கிடங்கு பாதுகாப்பாக உள்ளது என்றும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவுதி போராளிகள் இதுவரை 107 ஏவுகணைகளையும் 66,000 சிறியரக ராக்கெட்டுகளையும் சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஹவுதி போராளிகளுக்கு ஆயுதங்களை ஈரான் அரசே வழங்கி வருவதாக சவுதி குற்றம் சாட்டியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close