சிரிய உள்நாட்டுப்போரில் 26 வீரர்கள் பலி; இஸ்ரேல் காரணமா?

  Newstm Desk   | Last Modified : 01 May, 2018 09:12 am


சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில் சமீபத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் சிரிய கூட்டுப்படையினர் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என சிரிய ராணுவம் தெரிவிக்கிறது. 

சிரியாவில் ராணுவப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் பலியாகினர். உலகத்தையே உருக்கிய இந்த சிரியப்போர் நீண்டு கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரிய ராணுவப்படையினர் சுமார் 26 பேர் வரையில் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றும் பொருட்டு சிரியபடைகளுக்கு ரஷ்ய ராணுவம் உதவி வருகிறது. 

இதுகுறித்து சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது, "சிரியாவின் ஹாமா மாகாணத்திலுள்ள சல்ஹாப் மற்றும் 47வது பிரிகேட் ராணுவ தளங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.இஸ்ரேல் ராணுவம் அந்தத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 26 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர்  சிரியப்படையைச் சேர்ந்தவர்கள். மற்ற 22 வீரர்களும் ரஷ்ய, ஈரான் படையைச்சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close