16 துருக்கி பெண்களுக்கு மரண தண்டனை

  SRK   | Last Modified : 26 Feb, 2018 12:52 pm


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 16 துருக்கி பெண்களுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் வீழ்த்தப்பட்டு, அந்த அமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும் அவர்களது குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு நடந்து வந்தது. 

இவர்கள் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை திருமணம் செய்து, அவர்களின் தீவிரவாத செயல்களுக்கு பல உதவிகளை புரிந்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த பெண்கள் மீது இவ்வாறு வழக்குகள் நடந்து வந்தது. இந்நிலையில், துருக்கி நாட்டை சேர்ந்த 16 பெண்களுக்கு மரண தண்டை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மேல் முறையீடு செய்துகொள்ளும் வாய்ப்பு குற்றவாளிகளுக்கு உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close