சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுத உதவி: ஐ.நா

  SRK   | Last Modified : 28 Feb, 2018 10:18 pm


சிரியாவில் நடந்து வரும் போரில், அதிபர் பஷார் அல் சாத் தலைமையிலான அந்நாட்டு அரசு, ரசாயன குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், ரசாயன ஆயுதங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வடகொரியா வழங்கியதாக ஐ.நா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

அந்த அறிக்கையின் படி, 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, சுமார் 40 முறை வடகொரியாவில் இருந்து கப்பல் மூலம் ரசாயன குண்டு செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் சிரியா வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சரக்குகளுக்கான ஆவணங்கள் இதற்கு முன் வெளியாகவில்லை. 

மேலும்,  சிரியா ஆய்வு நிலையங்களில், வடகொரிய விஞ்ஞானிகள் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட சிரியா அரசு, போரில் குளோரின் பயன்படுத்துவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சிரியாவில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை ஐ.நா வெளியிட்டது. ஆனால், அதை அந்நாட்டு அதிபர் மறுத்துவிட்டார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close