சவுதியில் முதல்முறையாக ‘மகளிர் மட்டும்’ மாரத்தான்!

  PADMA PRIYA   | Last Modified : 04 Mar, 2018 09:05 pm

சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல் முறையாக நடைபெற்றது. 

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ’'சவுதி அரேபியா விஷன் 2030’' என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 1500 பெண்கள் கலந்துகொண்டனர். இந்த பெண்கள் பார்தா அணிந்தபடி, முகம், உடல் முழுவதும் மறைத்தபடி 3 கி.மீ. தொலைவுக்கு ஓடினர்.

சமீபத்தில், பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி,  சவுதி பெண்கள் ஆண்களில் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம், பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து,  கால்பந்து ஆட்டத்தை நேரில் பார்க்க அனுமதி என பல சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close