சிரியாவில் மீண்டும் கொடூரம்: ரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் பலி

  SRK   | Last Modified : 08 Apr, 2018 02:36 pm


சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமாவில் இன்று நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகள் இன்று திடீரென மோசமான தாக்குதல் டூமாவில் நடந்து வருவதாக தெரிவித்தனர்.  பின்னர் அவர்கள் அங்கிருந்த சம்பவங்களை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இதில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் வீடுகளில் இறந்து கிடந்ததும், பலர் வாயில் நுரையுடன் கிடப்பதையும் பார்க்க முடிந்தது. 

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, சிரிய அரசு படைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. வைட் ஹெல்மெட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சிரிய கிளர்ச்சியாளர்கள்  ஆதரவு ஊடகமும், சிரிய ராணுவத்தை குற்றம் சாட்டியது.

வானில் இருந்து ஒரு பேரல் விழுந்ததாகவும், அதில் சாரின் எனப்படும் தடைசெய்யப்பட்ட ரசாயன பொருள் இருந்ததாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பலர் இறந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.  இதற்கு முன் பலமுறை சிரிய அரசு தன் மக்கள் மீதே ரசாயன குண்டுகள் வீசியுள்ளதை அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close