ஆப்கான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 10:59 am


ஆப்கான் வாக்குச்சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் திறக்கப்பட்டு வாக்காளர் கணக்கெடுப்பு, புதியதாக வாக்காளர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்த சமயத்தில் நேற்று(ஏப்ரல்.22) தலைநகர் காபூலில் உள்ள தாஷ்-இ-பார்சி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தீவிரவாதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முதற்கட்டமாக 31 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இன்றைய நிலவரப்படி, தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இதுவரை 119 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close