ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 25 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 12:37 pm


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இரண்டு இடங்களில்  பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் காபூலில் தற்கொலைப்படையினரின் தாக்குதல் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் இன்று காபூலின் இரண்டு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

காபூல் மத்திய பகுதியில் ஷாஷ் தரக் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் குண்டுகளை பதுக்கி வைத்து வெடிக்கச் செய்தனர். மேலும் ஒரு 40 நிமிடங்கள் கழித்து, அதற்கருகே உள்ள மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவங்களில் ஒரு பெண், 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 25 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close