ஆப்கானில் 6 இந்தியர்களை தலிபான்கள் கடத்தினர்!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 07:15 pm


ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் 6 இந்தியர்களை கடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் வெளியுறவுத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆப்கானின் தெற்கே உள்ள பஹ்லான் என்ற மாகாணத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த 6 இந்தியர்களை  தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இந்த மாகாணத்தில் இந்தியர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர். 

கே.இ.சி என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் தற்போது கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஆப்கானிஸ்தானின் பஹ்லான் பகுதியில் துணை மின் நிலையங்களை அமைக்கும் காண்ட்டிராக்டை பெற்று செய்து வருகிறது. இந்தியர்களை அந்த நிறுவனம் இன்று பணிக்கு வாகனத்தில் அழைத்து சென்றபோது கடத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தாங்கள்தான் கடத்தினோம் என்று அறிவிக்கவில்லை. இருப்பினும், அந்த பகுதியில் தலிபான்கள் செயல்பாடு அதிகம் என்பதால், அவர்கள் கடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடத்தப்பட்ட 6 பேரையும் விடுவிக்கும் முயற்சியில் இந்தியத் தூதரகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. பத்திரமாக அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தூதரகம் உறுதி அளித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close