ஆப்கான் மசூதியில் குண்டுவெடிப்பு; 12 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 10:14 pm


ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் என்ற பகுதியில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் தாங்கள் பதுக்கி வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தற்போது ஆப்கானில் நடைபெற உள்ள தேர்தலை நடக்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஐஎஸ் மற்றும் தலிபான் தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த குண்டு வெடிப்புக்கு அவர்கள் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close