கியூபாவில் விமான விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் பலி

  Sujatha   | Last Modified : 19 May, 2018 08:25 am


கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.      

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, போயிங் 737 ரக பயணிகள் விமானம்  ஒன்று ஹோல்குயின் நகருக்கு  புறப்பட்டது.  அதில் 105 பயணிகள்  உட்பட 5 குழந்தைகள் மற்றும் 9 விமான பணியாளர்கள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பயணம் செய்தவர்களில் 100 கியூபாவை சேர்ந்தவர்கள், 5 பேர் வெளி நாட்டவர் என தெரியவந்துள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.   .        

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close