நிபாவைத் தொடர்ந்து புதிய அச்சுறுத்தல்... வந்துவிட்டது மற்றொரு வைரஸ் தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 11:46 pm


சமீபத்தில் உலகை அச்சுறுத்திய வைரஸ்களில் ஒன்று நிபா வைரஸ். வெளவால்களின் எச்சத்தால் பரவக்கூடியதாக கூறப்பட்ட இந்த கொடிய வைரஸ், பின் அது வெளவால்களால் பரவவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. எந்த ஒரு வைரஸ் தொற்று நோய்க்கும் மருந்து இல்லை என்ற நிலையில், கொடிய நிபா வைரஸ் தாக்குதலுக்கு இளம் செவிலியர் உள்பட இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் புதிதாக மற்றொரு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பயப்பட வேண்டாம், நம் ஊரில் இல்லை. இது மத்திய கிழக்கு நாடுகளில்... இந்த வைரசுக்கு பெயர் மெர்ஸ். ஐக்கிய அரபு அமீரகத்தில் மெர்ஸ் வைரஸ் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்தில், ஒட்டகப் பண்ணை அதிபர் ஒருவர் மெர்ஸ் வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளார். அரபு நாடுகள் மட்டுமின்றி மலேசியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு காணப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த 2012 இல் கண்டறியப்பட்டு பரவலாக பேசப்பட்ட மெர்ஸ் “மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம்” எனும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மெர்ஸ் வைரஸினால் தாக்கப்பட்டவர்களில், சுமார் 35 % பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். மெர்ஸ் வைரஸ் ஒட்டகங்களில் உள்ள கிருமிகளில் இருந்து பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. பெரும்பாலும் சவுதி அரேபியாவிலே இந்த வைரஸ் அதிகம் தாக்கப்படுகிறது.


ஒட்டகத்தின் பாலை சுடவைக்காமல் குடிப்பது, அசுத்தமான வசிப்பிடம், பாதுகாப்பற்ற உணவு வகைகளை உண்பதால் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,207பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல், டென்ஷன் ஆகியவை இவ்வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் ஆகும். ஒட்டகத்தின் மாமிசம், பால் இவற்றை முறையாக சமைத்து உண்ண வேண்டும் என்று அமீரகத்தின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close