சீர்திருத்த நடவடிக்கைகள்: சவுதி இளவரசருக்கு அல் கொய்தா கடும் எச்சரிக்கை!

  Padmapriya   | Last Modified : 05 Jun, 2018 04:43 am

al-qaeda-warns-saudi-crown-prince-his-cinemas-events-are-sinful

அரேபிய தீபகற்ப அல் கொய்தா அமைப்பு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்னை எச்சரித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் பெண்களின் நலனுக்காகவும், வருமானத்தை மேம்படுத்தவும் அதன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக அங்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சினிமா, இசை, நாடகம்  போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள், இசை மற்றும் நாடக, நடன அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. 

பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி என்று பல சட்டங்கள்  தளர்த்தப்பட்டன. பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதனால் முகமது பின் சல்மானுக்கு பெரும் வரவேற்பு உருவாகிவருகிறது. அவரை அனைவரும் சீர்திருத்த இளவரசர் என அழைக்கின்றனர்.

இந்த நிலையில் சவுதி அரசின் இத்தகைய முடிவுக்கு அல் கொய்தா அமைப்பு கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரத்தை அளித்து வருவதாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்து வருகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்தகைய நடவடிக்கையை இளவரசர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல் கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடையவை:

சவுதி அரேபியா பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி

சந்தேகப்பட்டு மனைவியின் மொபைலை நோட்டம் விட்டால் சிறை: சவூதி அதிரடி

சவுதி இளவரசியை அட்டைப்படத்தில் கவுரவப்படுத்திய வோக் இதழ்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.