ஏமனில் படகு கவிழ்ந்து 46 அகதிகள் பலி, பலர் மாயம்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:31 am
at-least-46-migrants-die-as-boat-capsizes-off-yemeni-coast-un

ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாகவும் 16 பேர் மாயமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகருத்து வருகின்றன. இவர்கள் அதற்கு ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்தனர். இதில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர்.

இந்த படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர்.

படகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் அலைகள் அபாயகரமாக எழுந்த நிலையில், உயிர் காப்பு கவசம் அணியாதவர்கள் அச்சத்தில் கடலுக்குள் குதித்து உள்ளனர்.  அவர்களில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீட்பில் ஈடுபட்ட ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close