ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதல்: பலி 18 ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 12:37 pm
suicide-attack-in-afghanistan-s-nangarhar-kills-at-least-18

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவியுடன் ஆப்கான் படைகளும்  தீவிரவாதிகளை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜலாலாபாத் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்திற்கு வெளியே தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், அதிகாரிகள், தீவிரவாதிகள் உள்பட 36 பேர் வரையில் உயிரிழந்தனர். 

இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாவதாக தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில், முதலில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பாக , ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான் தீவிரவாதிகள் அரசுப்படையினரை கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close