உள்நாட்டு போர் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? - சிரிய அதிபர் ஆசாத் பதில்

  Padmapriya   | Last Modified : 24 Jun, 2018 03:12 pm
assad-says-talks-with-us-will-be-a-waste-of-time

அமெரிக்காவுடனான தான் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் அப்படி நடந்தால் அது நேரத்தை வீணடிப்பது போல தான் என்று சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் தெரிவித்துள்ளார். 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து,  உள்நாட்டு போரில் குறித்து சிரியாவின் அதிபர் ஆசாத்தும் அவரை சந்திப்பாரா என்று சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து ஆசாத் ரஷ்ய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. அமெரிக்காவின் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். என்ன பேச வேண்டும் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும். இந்த அராஜகப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். " என்று ஆசாத் தெரிவித்தார். 

அதோடு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றால், அத்தகைய சந்திப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

a

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close