ஆப்கானில் தற்கொலைப்படை தாக்குதல்; 8 பேர் உடல் சிதறி பலி!

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 12:06 pm

kunar-suicide-bombing-claims-eight-lives-in-afghanistan

ஆப்கானிஸ்தான் குனார் மாகாணத்தில் தற்கொலைப்படை நடத்திய தீவிரவாத தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் காபூல் நகர் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 8 மணியளவில்  தற்கொலைப்படை  தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.  ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் குனார் மாகாணத்தில் உள்ள காவல் நிலைய பூத்திற்கு அருகே பயங்கரவாதிகள் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் சம்பவ இடத்திலே 8 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இறந்தவர்களின் விபரமும் இன்னும் தெரியவில்லை. அதேபோல் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.