குடிநீருக்காக அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறைகளை 'அபேஸ்' செய்ய அமீரகம் திட்டம்!

  Padmapriya   | Last Modified : 02 Jul, 2018 09:12 pm
uae-to-tow-icebergs-from-antarctica-for-new-project

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஐக்கிய அமீரகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மறுபக்கம், பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து, கடல் நீர் நாடுகளுக்குள் உட்புகும் நிலையும் உள்ளது. 

ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நல்ல தண்ணீருக்கு அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் அண்டார்டிகாவில் இருந்து, பனிக்கட்டிகளை கொண்டுவந்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய விஞ்ஞானிகள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

அண்டார்டிகா பனிப்பாறைகளை அமீரகத்துக்கு கொண்டு வந்து, அதனை நல்ல தண்ணீராக மாற்றும் இந்தத் திட்டத்துக்கு, மற்றத் திட்டங்களைக் காட்டிலும் நிதித் தேவை குறைவாகவே இருக்கும் என்பது அமீரக அரசுக்கு ஆய்வாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

2020க்குள் இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த அமீரக அரசு திட்டமிடுகிறது. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் தண்ணீரை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக அமீரகமும் மாறும் அளவிலான வியூகங்களை அந்நாடு வகுத்து வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close