ஏமனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

  Padmapriya   | Last Modified : 15 Jul, 2018 10:22 am
yemen-rocked-by-magnitude-6-2-earthquake-usgs-confirms

ஏமனில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏமனில் இன்று காலை 5 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏடன் வளைகுடா பகுதியில் அமைந்த சகோட்ரா தீவுக்கு வடமேற்கே 213 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்களுக்கு கடுமையான பாதிப்புகள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close