என் மகன் மிகவும் நல்லவன்: கடந்த காலத்தை நினைத்து வருந்தும் பின் லேடனின் தாய்!

  Padmapriya   | Last Modified : 04 Aug, 2018 07:30 pm
my-son-osama-the-al-qaida-leader-s-mother-speaks-for-the-first-time

அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட அல் காய்தா பயங்கரவாதி பின் லேடன் குறித்து முதன் முறையாக பிரிட்டன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவரது தாய் அலியா கனெம் பேட்டி அளித்துள்ளார். 

ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.  அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல் காய்தா பயங்கரவாத இயக்க தலைவன் ஒசாமா பின் லேடன் குறித்து தி கார்டியன் தொலைக்காட்சிக்கு அவரது தாயார் அலியா கனெம் பேட்டி அளித்துள்ளார்.  
அந்தப் பேட்டியில் பின் லேடனின் குழந்தைப் பருவம் முதல் நினைவுகூர்ந்துள்ளார்.  

பின் லேடன், தனது முதல் கணவனுக்கு பிறந்து இரண்டாவது கணவனால் மிகவும் பாசத்துடன் வளர்க்கப்பட்டதாக அவர் விவரித்துள்ளார். மேலும், குழந்தைப் பருவம் முதல் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட தனது மகன், மிகவும் அமைதியானவர் எனவும் தனது இளைமை காலத்தில் ஒரு மதவாதக் குழுவால் மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். அந்த தொடர்பு குறித்து தெரிந்தவுடன் அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு பின் லேடனை கண்டித்ததாகவும் ஆனால், அவர் தனக்கு தெரியாமல் மறைமுகமாக அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளளார். 

அவரது பேட்டியில் மேலும் கூறப்பட்டதன்படி, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகும் ஒசாமா பின்லேடனின் குடும்பம், சவுதி அரேபியாவின் செல்வாக்கு பெற்ற குடும்பமாகவே  உள்ளது.  தனது மகன் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவன் காரணமல்ல என்றும் அவன் எப்படியோ வழி தவறி விட்டான் என்றும் கூறியுள்ளார். 

கிங் அப்துலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த பின்லேடன், பல்கலைக்கழகத்தில் சிலரால் மாற்றப்பட்டதாக கூறுகிறார்.  அங்கு அவன் சில குறிப்பிட்ட மதவாதிகள் சந்தித்தபின் புதிய மனிதனாக மாறிவிட்டான். தனது செயல்பாடுகளை அவன் எனக்கு சொல்லவேயில்லை, காரணம் அவன் என்னை அவ்வளவு நேசித்தான் என்கிறார்.தனது மகன் குறித்து தான் வெட்கப்படவில்லை என்று கூறும் அவர் , அவனது கூட்டாளிகள்தான் அவனை மாற்றிவிட்டார்கள் என்கிறார். 

இன்னும் சவுதி அரேபியாவில் செல்வாக்குடன் வாழும் இஅவர்களது குடும்பம் தங்களது கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்வை தொடங்க நினைத்தாலும்,  பின்லேடனின் மகனான ஹம்சாவும் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் கடந்த காலத்திலிருந்து மீள முடியவில்லை என அலியா கவலைத் தெரிவித்துள்ளார். தங்களது செயல்பாடுகள் அனைத்தையும் சர்வதேச உளவுத்துறைகள் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சாதாரண அமைதியான வாழ்க்கைக்கு வாய்ப்பு இல்லை என்று வருந்தி இருக்கிறார் பின் லேடனின் தாய் அலியா கனெம். 

தொடர்புடையவை: பின் லேடனின் கடைசி தொழுகை: மனைவி உருக்கமான பேட்டி!  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close