ஈரான் நெருக்கடி: பொருளாதார அமைச்சர் பதவி நீக்கம் 

  Padmapriya   | Last Modified : 27 Aug, 2018 12:00 pm

iran-economy-minister-impeached

ஈரான் நாட்டின் பொருளாதார அமைச்சராக பதவி வகித்த மசூத் கர்பாசியன் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.  விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்நாட்டு நாணய மதிப்பும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலைக் குறித்து துறை அமைச்சரான மசூத் கர்பாசியனிடம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவரது துறையில் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அடுக்கடுக்காக புகார் கூறினர்.

மேலும், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான விவாதம், அந்த நாட்டின் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பானது. 

முடிவில் தீர்மானத்துக்கு ஆதரவாக 137 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 121 ஓட்டுகள் பதிவாகின. 2 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேறியது. 

அதைத் தொடர்ந்து பொருளாதார மந்திரி மசூத் கர்பாசியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஈரானில் அதிபர் ஹசன் ரூஹானியின் மந்திரிசபையில் ஒரே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் பதவி பறிக்கப்பட்ட 2–வது மந்திரி என்ற பெயரை இவர் பெற்றார்.


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.