ஆப்கானிஸ்தான்: பேரணியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 05:59 am

afghanistan-7-killed-in-suicide-blast

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், 7 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர். 

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய தலைவர் ஒருவரின் நினைவு தினத்தை பேரணியாக அவரது ஆதரவாளர்கள் கடைபிடித்தனர். அஹ்மத் கான் மசூத் என்ற கமேண்டர், ரஷ்யா மற்றும் தலிபான்களுக்கு எதிராக போராடி வந்தார். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட செப்டம்பர் 11ம் தேதிக்கு இரு தினங்களுக்கு முன் இவர் கொல்லப்பட்டார். அவரது 18வது நினைவு நாளை முன்னிட்டு மக்கள் பேரணியாக சென்று கொண்டிருந்த போது, டைமணி ஸ்குவையார் என்ற இடத்தில் வைத்து மதியம் 3 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. 

"தேசத்தின் முக்கிய முன்னாள்  தலைவருக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் அதிகம் இருந்த இடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது" என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஜிப் டனிஷ் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close