சவுதி தொலைக்காட்சியில் முதன்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் 

  Padmapriya   | Last Modified : 23 Sep, 2018 05:42 pm
weam-al-dakheel-makes-history-by-becoming-first-female-anchor-of-saudi-arabia

சவுதியில் பெண்களை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களாக பணியாற்ற அந்நாட்டு அரசு முதல்முறையாக அனுமதி அளித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டவிதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் பெண்கள் கார் ஓட்டுவதற்கே அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

இதன் மூலம் சவுதியில் முதல் பெண் வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றவராக வீம் அல் தஹீல் திகழ்கிறார். 

முன்னதாக இதே போல உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் இருக்கும் நாகரிக ஆடைகள் அணிந்து கொள்ள பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 பின்னர் ரியாத்தில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தின் போது, நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இது போன்ற சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் தொடர் சீர்த்திருத்த நடவடிக்கைகள் பல தரப்பினரால் வரவேற்கப்படுகிறது. 

இருப்பினும் அங்கு பழமைவாத நபர்களால் எதிர்ப்பும் இருந்து வருகிறது. அல்-கொய்தா தீவிரவாத அமைப்பும் இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close