சவுதி பத்திரிகையாளர் கொலையை மூடி மறைக்க விடமாட்டோம்: துருக்கி

  shriram   | Last Modified : 21 Oct, 2018 09:40 am
won-t-allow-cover-up-in-jamal-kashoggi-killing-turkey

துருக்கியில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எக்காரணத்தை கொண்டும் விசாரணையை மூடி மறைக்க மாட்டோம் என துருக்கி அரசு தெரிவித்துள்ளது. 

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அந்நாட்டின் அரசுக்கு எதிராகவும் மன்னருக்கு எதிராகவும் செய்தி வெளியிட்டு வந்தார். அமெரிக்காவின் பிரபல வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகைக்காக கஷோகி எழுதி வந்தார். துருக்கியில் வாழ்ந்து வந்த அவர், அங்குள்ள சவுதி தூதரகத்திற்கு குடியுரிமை விவகாரங்கள் குறித்து அழைக்கப்பட்டார். தூதரகத்திற்கு சென்ற கஷோகி, மாயமானார். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், அவர் சென்ற அதேநேரம், சவுதி அரசுக்கு நெருக்கமான 15 அதிகாரிகள் தூதரகத்திற்கு சென்றது தெரிய வந்தது.

தூதரகத்தில் வைத்து, கஷோகி சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதாவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, அமிலத்தில் கரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. துருக்கி அரசு நடத்தி வந்த விசாரணையாலும், சர்வதேச அளவு எழுந்த நெருக்கடியாலும், கஷோகி தூதரகத்தில் வைத்து இறந்ததை சவுதி ஒப்புக் கொண்டது. ஆனால், அங்கு ஏற்பட்ட ஒரு சண்டையில் அவர் இறந்ததாக சவுதி அரசு அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில், சவுதி அரசுக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தால் விசாரணையில் அது நிச்சயம் தெரிய வருமென்றும், மூடி மறைக்க விட மாட்டோம், என்றும் துருக்கி தெரிவித்துள்ளது. "இந்த குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டால், சவுதி அரசால் அதை மறைக்க முடியாது. என்ன நடந்தது என துருக்கி அரசு நிச்சயம் வெளியிடும். யாருக்கும் இதில் சந்தேகம் வேண்டாம்" என துருக்கி ஆளும்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுமன் குர்டுல்மஸ் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close