சவுதி பத்திரிகையாளர் கொலை பற்றி உண்மையை சொல்ல போகிறேன்: துருக்கி அதிபர்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 03:26 pm
will-reveal-truth-about-saudi-and-khashoggi-erdogan

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து, சவுதி நாட்டின் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மை என்னவென்பதை தானே தெரிவிக்க உள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

இந்த மாத துவக்கத்தில், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மாயமானார். சவுதி அரச குடும்பத்துக்கு எதிராக எழுதி வந்த அவரை, சவுதி அதிகாரிகள் சேர்ந்து தூதரகத்திலேயே வைத்து சித்தரவதை செய்து, கொலை செய்ததாகவும், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்ததாகவும் கூறப்படுகிறது. துருக்கி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி 18 பேரை கைது செய்துள்ளனர். சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடிக்கு பின், தூதரகத்துக்குள் நடந்த ஒரு சண்டையில் கஷோகி பலியானதாக சவுதி அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், நிச்சயம் உண்மையை தானே தெரிவிக்க உள்ளதாக கூறினார். "எதற்காக சவுதியில் இருந்து 15 பேர் இங்கு வந்தார்கள். எதற்காக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்தையும் பற்றிய உண்மையை நான் விளக்கமாக கூற போகிறேன்" என்றார்.

கஷோகியின் உடலை கண்டுபிடிக்க, சவுதி தூதரகம் மற்றும் தூதரின் வீடுகளில் துருக்கி போலீசார் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close