அமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்து 39 ஆண்டுகள் - ஈரானியர்கள் அனுசரிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 05:16 pm
39th-anniversary-of-iran-hostage-crisis

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்த தினத்தின் 39வது ஆண்டை அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கு கோஷங்கள் எழுப்பி அனுசரித்து வருகின்றனர். 

1979ம் ஆண்டு, ஈரானில் மாபெரும் எழுச்சி நிகழ்ந்தது. அமெரிக்க ஆதரவு அரசர் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் ஆட்சியை கவிழ்த்தனர். அப்போது நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த அமெரிக்கர்கள், தூதரக அதிகாரிகள் என 52 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். 444 நாட்கள் அவர்கள் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த விவகாரத்தால், அமெரிக்காவுடனான ஈரானின் உறவு 1980ம் ஆண்டு முறிந்தது. அமெரிக்காவை ஈரான் மடிய வைத்த நாளாக பார்க்கப்படும் இந்த தினம், அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், அந்நாட்டு மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவும், சர்வதேச விதிகளை மீறிய ஈரான் மீது ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அந்த நிகழ்வின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. நூற்றுக்கணக்கான ஈரானிய மக்கள், வீதிகளுக்கு வந்து, அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close