சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதல்: 70 பேர் பாதிப்பு, 9 பேர் பலி 

  Padmapriya   | Last Modified : 25 Nov, 2018 01:35 pm
over-70-people-hospitalized-in-syria-s-aleppo-after-militants-shell-city-with-poison-gas-reports

சிரியாவின் மிகப் பெரிய நகரான அலெப்பே நகரில் பயங்கரவாதிகள் ரசாயன வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டு 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அலெப்பே நகரில் பயங்கரவாதிகள் ரசாயன வெடிகுண்டு மூலம் மனித உடலின் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கக்கூடிய குளோரின் வாயு கலந்த வெடிகுண்டை வீசியதில், பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிரிய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் தரப்புக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் கடுமையான மூச்சுத்திணறலால் மருத்துவமனை முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி, அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 7 ஆண்டுகள் முடிந்து 8வது ஆண்டாக அந்த உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கால் பதித்து பரவலாக பல இடங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அரசுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகளும் போரில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் ஈடுபட்டுள்ளது.

ரசாயன தாக்குதல் நடந்த அலெப்பே நகரம் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரை பிடிக்க பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் ரசாயனம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என ஏற்கனவே ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close