"மூச்சு விட முடியவில்லை" - பதறவைக்கும் கஷோகியின் கடைசி வார்த்தைகள்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 04:54 pm
i-can-t-breathe-jamal-khashoggi-s-showcase-last-words

சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சாகும் தருவாயில் "என்னால் மூச்சு விடமுடியவில்லை" என்ற கடைசி வார்த்தைகளை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். இதனால் அவர் மீது அதிருப்தியில் இருந்து அந்நாட்டு அரசு, கூலிப்படையை வைத்து அவரை கொலை செய்தததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. துருக்கியில் வைசத்து வந்த கஷோகி, கடநத அக்டோபர் மாதம் மாயமானார். கடைசியாக அவர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்று இருந்தார். அதன்பின் வெளியே வராத அவரை, சவுதி நாட்டு அரசுக்கு தொடர்புடைய கூலிப்படை ஒன்று, அங்கேயே சித்திரவதை செய்து கொலை செய்ததாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து துருக்கி அரசு நடத்திய விசாரணையில், அவரை கூலிப்படையை தூதரகத்தில் வைத்து கொலை செய்ததாக உறுதிபடுத்தியது. ஒரு தகராறில் தற்செயலாக அவர் பலியானதாக சவுதி அரசு கூறினாலும், எப்படி இறந்தார் என்று கூறவோ, அவரது உடலையோ காட்டவோ மறுத்துவிட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், சவுதி முடி இளவரசர் சல்மானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் அவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் போர்க்கொடி பிடித்தனர். 

இந்த நிலையில் கஷோகி கொலை செய்யப்பட்டபோது, பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை அமெரிக்க அரசிடம் துருக்கி அரசு வழங்கியதாக தெரிவித்துள்ளது. இந்த ஆடியோவில், கூலிப்படையினர் பேசியதை வைத்து பார்க்கும்போது, இது திட்டமிட்ட கொலை தான் என்றும் தற்செயலாக நடந்த நடந்தது அல்ல, என்றும் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் சாகும் தருவாயில், "என்னால் மூச்சு விடமுடியவில்லை" என கஷோகி பேசியது அதில் பதிவாகியுள்ளது என்றும் சிஎன்என் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சவுதியை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள துருக்கி அதிகாரிகள் அவர்களை நாடு கடத்த கோரி வருகின்றனர். ஆனால், "இது அரசின் திட்டமல்ல, சமூக விரோதிகள் சில செய்த காரியம்" என சவுதி அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இளவரசர் சல்மானின் உத்தரவிலேயே இந்த கொலை நடந்ததாக, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close