சவுதி இளம்பெண்ணை அகதியாக அறிவித்தது ஐ.நா!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 08:23 pm

escaped-saudi-woman-gets-refugee-status-from-un

சவுதியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி, தாய்லாந்து வந்து பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வந்த நிலையில், அவரை அகதியாக ஐநா அறிவித்துள்ளது.

சவுதி நாட்டை சேர்ந்த ரஹப் முஹம்மது அல்-கனன் என்ற இளம்பெண், தனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்ததால், வீட்டை விட்டு ஓட முடிவெடுத்தார். குடும்பத்தோடு குவைத்துக்கு சுற்றுலா வந்திருந்த போது, அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவை நோக்கி பயணம் செய்தார். சவுதியில் ஆண் உறவினர் துணையில்லாமல் பெண்கள் பயணம் செய்ய முடியாது என்பதால், குவைத் வரும்வரை அவர் காத்திருந்துள்ளார். 

அல்-கனன் சென்ற விமானம், தாய்லாந்தில் தரையிறங்கிய பின், அவரை அங்குள்ள அதிகாரிகள் பிடித்து வைத்து, திரும்ப சவுதிக்கு அனுப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. தான் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டதாகவும், தன்னை திருப்பி சவுதிக்கு அனுப்பினால், பெற்றோர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றும் அல்-கனன் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு மன்றாடினார். இதை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்தது. இதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு அவரை திருப்பி அனுப்பமாட்டோம், என உறுதியளித்தது. பின்னர், அவர் ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் கோரினார்.

அவர் நிரந்தரமாக வர முயற்சிக்கிறார் என தெரிந்துகொண்ட ஆஸ்திரேலிய அரசு, அவரது விசாவை ரத்து செய்தது. அவர் அகதி என அறிவிக்கப்பட்டால், அவருக்கு தஞ்சமளிப்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அல்-கனனின் நிலை குறித்து பரிசீலித்த ஐநா, அவரை அகதியாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அல்-கனனுக்கு தஞ்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.