ஐஎஸ்-ஸை முற்றிலும் ஒழிக்க, குர்து படைகள் இறுதி தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 01:03 pm
us-backed-kurd-forces-corner-is-in-final-push

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள கடைசி இரண்டு ஊர்களை கைப்பற்றும் நோக்கில், அமெரிக்க ஆதரவுடன் குர்துகள் தலைமையிலான சிரிய படைகள், இறுதிக் கட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் இறுதி கட்ட போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை, அரசு படைகள், குர்துகள் தலைமையிலான அமெரிக்க ஆதரவு படைகள், பல முனைகளில் தாக்குதல் நடத்தி வீழ்த்தின. தற்போது எஞ்சியிருக்கும்  ஐஎஸ் தீவிரவாதிகள், ஈராக் எல்லையில் உள்ள சிறிய பகுதியில் தற்போது பதுங்கி உள்ளனர். 

எஞ்சியுள்ள பகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில், அமெரிக்க ஆதரவு கொண்ட குர்துகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படை, பஹுஸ் மற்றும் ஹஜின் என்ற இரண்டு கிராமங்களில் பதுங்கியுளள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை பிடிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றியுள்ளதாக சிரிய ஜனநாயக படைகளின் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா பாலி தெரிவித்துள்ளார். 

"எஞ்சியுள்ள டெய்ஷ் (ஐ.எஸ்) படைகளை முறியடிக்க, இறுதிகட்ட தாக்குதல் துவங்கியுள்ளது. இது மிகவும் இக்கட்டான சூழ்நிலையாகும். எஞ்சியுள்ளவர்கள் ஐ.எஸ்-ஸின் மிக அனுபவமிக்க தீவிரவாதிகள் என்பதால், இது மிகவும் கடினமான தாக்குதலாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close