ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை அரபு மற்றும் ஆங்கில மொழிகள் தான் நீதிமன்ற அலுவல் மொழியாக இருந்து வந்தன. இந்த நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர் தொடர்பான வழக்குகளை கருத்தில்கொண்டு தற்போது ஹிந்தியும் அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அபுதாபியில் உள்ள ஹிந்தி பேசும் மக்கள் சட்ட நடைமுறைகளை எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும் என்று அந்நாட்டின் நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in