ஈராக்குடனான உறவை வலுப்படுத்தும் ஈரான்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 05:12 pm
iran-to-bolster-ties-with-iraq

ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி, அண்டை நாடான ஈராக் செல்லவுள்ள நிலையில், அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதார தடைகளை சமாளிக்க, ஈராக்குடன் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஈராக் இடையேயான உறவு, சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈராக்குக்கு, ஈரான் தொடர்ந்து ராணுவ உதவிகளை புரிந்து வந்தது. 

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுக்கு கடும் நெருக்கடி எழுந்தது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்த ட்ரம்ப், அந்நாட்டின் மீது பல்வேறு புதிய பொருளாதார தடைகளை விதித்தார்.

ஈரானுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க உலக நாடுகளையும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், ஈரானின் பொருளாதார வளர்ச்சிக்காக, ஈராக்குடனான நல்லுறவை மேம்படுத்த அந்நாட்டு அதிபர் ஹசான் ரூஹானி திட்டமிட்டுள்ளார். 

ஏற்கனவே, ஈரான் நாட்டின் இயற்கை எரிவாயுயை நம்பியே ஈராக்கின் 40% மின்சார உற்பத்தி உள்ளது. ராணுவ ரீதியாகவும் ஈரான் தொடர்ந்து உதவிபுரிந்து வரும் நிலையில், ஈரான் அதிபர் ரூஹானி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈராக் சென்றுள்ளார்.

இந்த பயணத்தில், இயற்கை எரிவாயு உட்பட பல வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close