சுரங்கத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சரண்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 09:10 pm
isis-soldiers-surrender-after-fall-of-caliphate

சிரியாவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த நிலையில், குர்துகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையின் தாக்குதலை தொடர்ந்து, வெளியே வந்து சரணடைந்தனர்.

உலகிலேயே மிக மோசமான தீவிரவாத அமைப்பாக கருதப்படும் ஐஎஸ், சிரியா, ஈராக்கில் பல பகுதிகளை ஆக்கிரமித்து, செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சிரியாவில் ஐஎஸ்-ஸுக்கு எதிராக இறுதிகட்ட போர் நடைபெற்று வருகிறது. குர்து கிளர்ச்சியாளர்கள் தலைமையில், அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் சிரிய ஜனநாயக படைகள், எஞ்சியிருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஊர்களை சுற்றி வளைத்து தாக்கி வருகின்றனர். 

ஈராக் எல்லையின் அருகே உள்ள பகுஸ் என்ற ஊரில், ஐஎஸ்-ஸுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஐ.எஸ் அங்கு வீழ்த்தப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் பதுங்கி இருந்த பல தீவிரவாதிகள் குர்து படைகளிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரணடைந்தவர்களில் வெளிநாடுகளை சேர்ந்த ஐ.எஸ் உறுப்பினர்கள் பலர் உள்ளதாகவும், இவர்கள் மீது உலக நாடுகள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குர்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இவர்கள் நடமாடும் வெடிகுண்டுகள் போல" என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close