சிரியாவில் ரசாயன தாக்குதல்: சர்வதேச குழு விசாரிக்க ரஷ்யா அனுமதி

  Padmapriya   | Last Modified : 17 Apr, 2018 04:58 pm

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ஐ.நா-விடம் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் அரசுப் படை ரசாயனத் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடக்கவில்லை என சிரியாவும், அதற்கு உதவி புரியும் ரஷ்யாவும் கூறியது. சர்வதேச குழு சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டவுமா பகுதியை பார்வையிட இரு நாடுகளின் கூட்டும் அனுமதிக்கப்படவில்லை.

ரஷ்யா அனுமதி: இதனை அடுத்து தாக்குதல் நடந்தப்பட்ட பகுதியில் வல்லுநர்கள் கொண்டு ஆய்வு நடத்த ஐ.நா. கேட்டுக் கொண்டதன் பேரில் ரஷ்யா அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், நாளை (புதன்கிழமை) தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் சென்று ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க மண் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகளைச் சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதியத் தாக்குதல் இதனிடையே, ஹோம்ஸ் நகரத்தில் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு, சிரிய வான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாக, செவ்வாய்க்கிழமையன்று சிரிய அரசு ஊடகம் கூறியுளளது. இந்த ஏவுகணையை யார் ஏவியது என்பது தெரிவிக்கப்படவில்லை. ''அப்பகுதியில், எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை'' என அமெரிக்கா கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டத்தில் குழந்தைகள் உள்பட 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் கூட்டு நாடுகளின் சார்பில், சிரியாவில், ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி, ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் டமாஸ்கஸ் நகரை நோக்கி 100-க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் தாக்கல் நடத்தப்பட்டது. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்ததை தடுத்து நிறுத்த முடியாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், தற்போதைய தாக்குதல் சம்பவங்களால் உலக அமைதிக்கும் பாதுகாப்பும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி நேரம் காரசாரமாக நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு ரஷ்யாவின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ரஷ்யா, சீனா, பொலிவியா நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவளித்த நிலையில் 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close