ஹபீஸ் கட்சியை பதிவு செய்யக்கூடாது: பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு

  முத்துமாரி   | Last Modified : 24 Dec, 2017 12:06 pm


பாகிஸ்தான்  பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்த ஹபீஸ் சயீத் தற்போது ஜமாத்-உத்-தவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளான். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஹபீஸ் மூளையாக செயல்பட்டுள்ளான். குறிப்பாக 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலில் இவனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தை போதிய ஆதாரங்கள் இல்லாததால் பாகிஸ்தான் அரசு அவனை வீட்டுச் சிறையில் இருந்து இன்று விடுவித்தது. 

இந்நிலையில் 2018ல் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஹபீஸ் சயீத் தலைமையிலான மில்லி முஸ்லீம் லீக் என்ற கட்சி போட்டியிட உள்ளது. ஆனால் ஹபீஸ் சயீத் உருவாக்கிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்தது. தற்போது வீட்டுச் சிறையில் இருந்து  ஹபீஸ் வெளியே வந்ததால் கட்சியை பதிவு செய்யும் பணியில் அவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளான். ஆனால்  ஹபீஸ் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close