பாகிஸ்தான்: இன்று மனைவி, தாயாரை சந்திக்கிறார் குல்பூஷண் ஜாதவ்

  நந்தினி   | Last Modified : 25 Dec, 2017 06:32 am

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, இன்று அவரது தாயார் மற்றும் மனைவி சந்திக்க இருக்கின்றனர். 

இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "டிசம்பர் 25ம் தேதி, குல்பூஷண் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் பாகிஸ்தானுக்கு வருகின்றனர். அன்றைய தினமே அவரை சந்தித்துவிட்டு நாடு திரும்ப உள்ளனர். அவர்களுடன் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரியும் உடன் இருப்பார்" என்று நேற்று தெரிவித்திருந்தார்.

மனிதாபிமான அடிப்படையில் ஜாதவின் மனைவி மற்றும் தாயாருக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகையையொட்டி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகபட்சம் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழும் என கூறப்படுகிறது. ஜாதவின் மனைவி மற்றும் தாயார், செய்தியாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிகிறது. அவர்களான சுதந்திரம் தேவை என பாகிஸ்தான் கருதுகிறது. நீண்ட நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பிறகே, ஜாதவை சந்திக்க அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 20ம் தேதி அவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.  

ஈரான் வழியாக பலுசிஸ்தான் மாகாணத்துக்குள் ஊடுருவி, உளவு பார்த்ததாக குல்பூஷண் ஜாதவ் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம், அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக நடந்த வழக்கில், ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஜாதவின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை கிடைத்தது.

ஜாதவின் மனைவி மற்றும் தாயார், அவரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டி, இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்து மனு அளித்து வந்த நிலையில், அதனை பாகிஸ்தான் ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தற்போது தான் பாகிஸ்தான் செவி சாய்த்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close