கட்சி அலுவலகம் திறந்த தீவிரவாதி ஹபீஸ் சையத்

  Anish Anto   | Last Modified : 26 Dec, 2017 01:38 pm

தீவிரவாதி ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் தனது தீவிரவாத இயக்கத்தின் மற்றொரு பிரிவான மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளான்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை நிறுவியனும், ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவனுமாகிய ஹபீஸ் சையத் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். மும்பை தாக்குதல் வழக்கில் ஹபீஸை பிடிக்க இந்திய அரசு எவ்வளவோ முயற்சிகள் செய்து வருகின்றது. பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்த ஹபீஸை இந்த வருட துவக்கத்தில் பஞ்சாப் மாகாண அரசு வீட்டு சிறையில் அடைத்தது. 10 மாதங்களுக்கும் மேல் வீட்டு சிறையில் இருந்த ஹபீஸை சமீபத்தில் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஹபீஸ் வீட்டு சிறையில் இருந்த காலத்தில் அவனது ஆதரவாளர்கள் சிலர் இணைந்து மில்லி முஸ்லீம் லீக்  எனும் கட்சியை துவங்கினர். ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத்தின் அரசியல் பிரிவாக இந்த கட்சி செயல்பட்டு வந்தது. பாகிஸ்தான் அரசு இந்த கட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் இந்த கட்சியை பதிவு செய்ய மறுத்து விட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் தங்கள் கட்சியை பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கூறி ஹபீஸ் சையத் தரப்பு மனு அளித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் மோஹினி சாலை பகுதியில் மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்தை ஹபீஸ் கடந்த வாரம் திறந்து வைத்துள்ளான். கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த ஹபீஸிற்கு மலர் தூவி அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர், அப்பகுதி மக்களிடம் உரையாடிய ஹபீஸ், அங்குள்ளவர்களின் குறைகளையும் கேட்டறிந்தான். இதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாத இயக்கத்தை பொதுவெளியில் சுதந்திரமாக செயல்பட விடமாட்டோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்படாவிட்டாலும் கடந்த முறை நடந்த தேர்தலில் இந்த கட்சி 4-வது இடத்தை பிடித்திருந்தது. இதன் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close